2025 மே 08, வியாழக்கிழமை

அலுவலகத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை

எஸ்.கார்த்திகேசு   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், வறிய மக்களின் நலன்கருதி, இவ்வருடம் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உப அலுவலகம், திறந்த நாளிலிருந்தே செயற்பாடற்றுக் காணப்படுவதாக, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் தெரிவித்துள்ளார்.

இவ் அலுவலகம் திறக்கப்பட்ட காலம் தொடக்கம் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறை, ஆளணிப் பற்றாக்குறைகளைக் காரணங்களாகத் தெரிவித்து  அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கத்தை மக்கள் அடைந்துகொள்ள முடியாது, வெறுமனே பெயர்ப் பலகையுடன் இருப்பதாக, அவர் தெ​ரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கைக் கடிதம் வழங்கியதாகவும் இதனை விரைவாகத் திறந்து மக்களுக்கான சேவைகளை வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெ​ரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உப அலுவலகமானது, அக்கரைப்பற்று தொடக்கம் பாணமை வரையான வறிய மக்களின் வீட்டுக்கடன்கள், இதரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X