2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கியால் ‘கல்முனைக்கு வரப்பிரசாதம்’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள "இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தி" திட்டத்தில், கல்முனை மாநகர சபை உள்வாங்கப்பட்டுள்ளமை இப்பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வரப்பிரசாதமாகுமென, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுடீன் தெரிவித்தார்.

இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டத்தை, கல்முனையில் முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், கல்முனை மாநகர சபையில் இன்று (18) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு, இத்திட்டம் குறித்து விளக்கமளிக்கையிலேயே, மேலதிக செயலாளர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X