Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.ஹனீபா
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுநர்களுக்கான நேர்முகப் பரீட்சை, இம்மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நடைபெறுமென, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே.புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.
இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிகக்கல்வி மற்றும் கணக்கீடு ஆகிய பாடநெறிகளுக்கு 100 பயிலுநர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்த நேர்முக பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் குறிப்பிடப்பட்ட தினத்தன்று, காலை 09 மணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய, கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று பீடாதிபதி கே.புண்ணியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago