Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அரசியல் ஆதாயங்களை தேடாமல், சகலரும் ஒருமித்த எண்ணத்தில் பயணித்தால் மட்டுமே நாட்டை மீட்கலாம் என ஸ்ரீ லங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.
காத்தான்குடியில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,
“எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்க முடிகின்றது.
“இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க ஒற்றுமையான விட்டுக்கொடுப்பு நிறைந்த அரசியல் கலாச்சாரத்தால் தான் முடியுமென உறுதியாக தான் நம்புகின்றேன்.
“ஜனாதிபதி ரணில், நாட்டை சரியான வழியில் கொண்டுசெல்லும் சந்தர்ப்பத்தில், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் சுய அரசியல் இலாபங்களை மறந்து செயற்பட வேண்டும்.
“மக்கள் படும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு, மக்களுக்கான "பல்கட்சி" அரசொன்றை அமைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, வெளிநாட்டு முதலீடுகளையும், சர்வதேச நாணய நிதிய உதவிகளையும் பெற்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.
“இந்நேரம் அரசியல் செய்து கட்சியை பாதுகாப்பது குறித்தோ அல்லது வாக்கு வங்கி குறித்தோ சிந்தித்து செயற்படக் கூடாது. நாளைய தலைமுறைக்கு சகல வளமுமிக்க எமது நாட்டை எப்படி ஒழுங்காக கையளிப்பது என்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்” என்றார்.
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026