2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் விவகாரம்; ஏனைய கோட்டங்களுக்கு மாற்ற பணிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவுகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டங்களில் ஆரம்பப்பிரிவு உள்ள பாடசாலைகளில் நியமிக்குமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பணித்துள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாம் தெரிவித்தார்.   

பொத்துவில் கல்விக் கோட்டத்தில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் 136 பேர் கடமையாற்றுகின்றனர். இருப்பினும் இக்கோட்டத்தில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் 123 பேர் போதுமாகவுள்ளனர். இந்நிலையில் மேலதிகமாகவுள்ள 13 ஆசிரியர்களை மேற்படி கோட்டப் பாடசாலைகளுக்கு நியமிக்குமாறே பணிக்கப்பட்டுள்ளது. எனவே பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய கோட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களை சமப்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை சுற்றுநிரூபத்துக்கமைய சமப்படுத்தும் வேலைத்திட்டம், அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை (13) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்ககாக ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களை ஏனைய பாடசாலைகளுக்கு சமப்படுத்துகின்றபோது, அதிபர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X