2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆழ் கடலில் மீன்கள் திருட்டு; வலைவீசுகிறது பொலிஸ்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை, கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது என, கல்முனை பொலிஸ் நிலையப் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜெமீல் முஹம்மட் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள் ஆகியன இணைந்து சாய்ந்தமருதில் இன்று (06) காலை நடத்திய சந்திப்பில் கலந்துகொண்டு, மீனவர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில், இந்த மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தைச் செயற்படுத்தி, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார். 

களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களியே ஆழ்கடலில் மீன்கள் திருட்டுக் போவதாகவும் சிறியரக மீன்பிடி படகுகளைக் கொண்டே இந்தத் திருட்டுகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  கல்முனை பொலிஸ் நிலையப் பிரதம பொலிஸ் பரிசோதகரிடம், மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .