Freelancer / 2023 மார்ச் 03 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் பாரிய படகு ஒன்று நேற்று வியாழக்கிழமை (02) விபத்துக்குள்ளானது.
காரைதீவைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் படகே இவ்விதம் கடலில் சேதத்திற்குள்ளாகியது.
சேதம் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக இன்னும் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான படகு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது. இதனை அறிந்த படகு உரிமையாளர் மற்றும் காரைதீவு கடற்படையினர் இணைந்து படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதை வேளையில் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்த ஒரு தொகுதி வலை மற்றும் ஒரு படகால் கட்டியிழுத்து வரப்பட்டு, ஜேசிபி கனரக வாகன உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக காரைதீவு பொலிஸ் நிலையத்திலும் கடற்றொழில் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது. (N)
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026