2025 மே 19, திங்கட்கிழமை

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் சாரதியும் நடத்துநரும் அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, பாலமுனைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியான டபிள்யூ.கே.டி.பெரேரா (வயது 36), நடத்துநரான வி.விஜயகுமார் (வயது 36) ஆகியோரே தாக்குதலுக்குள்ளானார்கள்.

பயணிகளை ஏற்றிக்கொண்டு இ.போ.ச. பஸ் ஒன்று அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து கல்முனைப் பிரதேசம் நோக்கி அட்டாளைச்சேனை பிரதான வீதியூடாக இன்று செவ்வாய்க்கிழமை பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது குறித்த இ.போ.ச. பஸ், இதே வீதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தனியார் பஸ் சாரதியும் நடத்துநரும் குறித்த இ.போ.ச. பஸ்ஸை வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துநருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X