எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், தனது சமூக ஆய்வு விடயமாக, ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு இன்று (18) பயணித்துள்ளார்.
இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஆய்வுப் போட்டி நிதியை வெற்றி பெற்றதன் மூலம், “கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூகப் பொருளாதார வலுவூட்டல்” என்ற சமூக ஆய்வை, இங்கிலாந்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரோடு சேர்ந்து தற்போது மேற்கொண்டு வருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே இந்தப் பயணம் அமைகிறது.
இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழக ஆய்வு நிதியைப் பெற்றுக்கொண்ட இலங்கைப் பல்கலைக்கழக மூன்று விரிவுரையாளர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago