Princiya Dixci / 2021 மார்ச் 03 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாண அதிபர்களின் இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுக் காலம் நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வேண்டுகோளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், இன்று (03) அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
“இவ்விடமாற்றங்கள், இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருமெனவும் இடமாற்றங்கள்
தொடர்பான மேன்முறையீடுகளை, இம்மாதம் 15ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் பலர் தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பரீட்சை, எதிர்வரும் 12ஆம் திகதி முடிவடைகிறது. இதன் பின்னர் வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். 15ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.
“இந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் 15ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்வதென்பது எந்த வகையிலும் சாத்தியமில்லாத விடயமாகும். இதனால் சம்மந்தப்பட்ட அதிபர்கள் பெரும் திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
“எனவே, மாகாண கல்வி அமைச்சு இவ்விடமாற்றங்களை அமுல்படுத்தும் காலப்பகுதியை, ஏப்ரல் 15ஆம் திகதி வரை பிற்படுத்தி, மேன்முறையீடு செய்ய வேண்டிய காலப்பகுதியை, மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 minute ago
19 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
26 minute ago
1 hours ago