2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’இடமாற்ற கட்டளையை உடனடியாக செயற்படுத்தவும்’

Princiya Dixci   / 2021 மார்ச் 28 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண இணைந்து சேவை உத்தியோகத்தர்களின்  2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளையை உடனடியாக செயற்படுத்தி, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களை தங்களின் அலுவலகங்களிலிருந்து விடுவிக்குமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு முதலாவது நினைவூட்டல் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் - 2021ஆம் ஆண்டுக்கான இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைக்கமைய, அதிகளவான இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் புதிய சேவை நிலையங்களுக்கு தற்போது வரை விடுவிக்கப்படாத காரணத்தால், பாரிய நிர்வாக சிக்கல்கள் ஏற்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதில் உத்தியோகத்தர்கள் கடமைக்கு அறிக்கை இடும் வரை காத்திராமல், இடமாற்றக் கட்டளைக்கு அமைவாக உத்தியோகத்தர்களை தங்கள் அலுவலகங்களிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறு குறித்த நினைவூட்டல் கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், படவினைஞர் உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .