2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இடமாற்றங்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை இடைநிறுத்தி, பதில் கடமை விடயம் தொடர்பிலும் மறுபரிசீலனை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அனைத்து முகாமைத்துவ  சேவை உத்தியோகத்தர்கள்  தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ. முபாறக் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவிகளில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிசிறப்புத் தரத்தை சேர்ந்தவர்கள் கடமையாற்றுவதுடன், அத்தரத்தை சேர்ந்தவர்கள் இல்லாத சபைகளில் அவர்களின் பதில் கடமைகளை முகாமைத்துவ சேவை தரம் 1 இனைச் சேர்ந்தவர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

“கிழக்கு மாகாணத்தில் தற்போது மேற்படி உத்தியோகத்தர்களில் சுமார் 20 பேர் திடீரென இடமாற்றப்பட்டுள்ளனர் . வருடாந்த இடமாற்றத்துக்கு விணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான இடமாற்றங்கள் செய்ய முடியாது .

“அத்துடன், பதில் கடமையாற்றியார்களில் சிலர் பதில் கடமையில் இருந்து தீக்கப்பட்டு, அவ்விடங்களுக்கு வேறு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

“முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்பு தரத்தினருக்கு நேர்முகப்பரீட்சை தற்பொது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது . அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ள இத்தருணத்தில், இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, சில வெற்றிடங்களை இல்லாமலாக்கி குறித்த சிலருக்கு சில இடங்களை வழங்குவதற்கான திட்டமிட்ட செயற்பாடாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .