Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றதை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் க.ஜெயதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (28) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்ட காலமாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமையால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல இயலாது அதிக மன உளைச்சலுக்கும், பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர்.
“ஆசிரியர்களின் நலனை கருத்தில்கொண்டு, இந்த இடர் காலத்திலும் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடாக இடமாற்ற கொள்கைகளுக்கு அமைவாக 2020 ஆண்டுக்கான கிழக்கு மாகாண இடமாற்ற பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்த போதும் கொரோனா தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டில் வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
“இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்தை நடைமுறைப் படுத்துவதற்காக ஆசிரியர் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர் இடமாற்ற சபையின் அங்கிகாரத்துடன் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, தபாலில் ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதும் குறித்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
“இரண்டு வருடங்களாக இவ்விடயத்தை தாமதப்படுத்துவது வருத்தத்துக்குரிய செயற்பாடாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago