Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இதழியல் டிப்ளோமா கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் நன்றி தெரிவித்துள்ளார்.
அம்பாரை மாவட்டத்தில் மிகக் கூடுதலான ஊடகவியலாளர்கள் இருந்தும் அவர்களது தொழில்சார் அறிவை விருத்தி செய்வதற்கு, இதழியல் கற்கைநெறி இன்மையால் பல சிரமங்களுக்குட்பட்டு வந்தனர்.
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல வருடங்களுக்கு முன்னர் இதழியல் கற்கை நடைபெற்றுவந்த போதும், அவை குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் நடைபெறவில்லை.
இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு சுமார் 05 வருடங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தால் விடுக்கப்பட்டுவந்த கோரிக்கையை ஏற்று, பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி முதல் இக்கற்கைநெறியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், முன்னாள் உபவேந்தரும் தற்போதைய எம்.பியுமான கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோருக்கு, மேற்படி சம்மேளனத்தின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago