Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூன் 21 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் இலாபங்களுக்காக, மக்களைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளின் கருத்துகளால், இன ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அண்மைக் காலமாக, கிழக்கு மாகாண அரசியல் தலைவர்கள் சிலரால், இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கூறப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பில், இன்று (21) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்துடன், கிழக்குத் தமிழர்கள் இணைந்துச் செயற்படும் போது, கிழக்கு முஸ்லிம்கள், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், அண்மையில் வெளியிட்ட கருத்து, இன ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
“30 வருடகால கொடூர யுத்தத்தால், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டிருந்த இன ஒற்றுமை, தற்போதைய சமாதானச் சூழ்நிலையில், படிப்படியாக அர்ப்பணிப்போடு வளர்ந்துவரும் இம்முக்கிய காலகட்டத்தில், த.தே.கூ முக்கியஸ்தர்கள் பகிரங்கமாகவே முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளைத் தெரிவித்து வருவது, கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் - முஸ்லிம் மக்களுடைய உறவைச் சீர்குழைப்பதாக அமைகிறது.
“பூர்வீகமான முறையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவரும் நாம், நமது சமூகங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சினைகள் வரும்போது, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துவைக்க முயற்சிக்க வேண்டும்.
“பிரச்சினைகளை, மனிதாபிமானத்துடன் அனுகி, இரு சமூகப் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தையூடாகத் தீர்ப்பதற்கு, அரசியல் தலைவர்கள் முயலவேண்டும். மாறாக, மீண்டும் இனவாதத்தை விதைப்பதன் ஊடாக, நிலையான சமாதானத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
7 hours ago
02 May 2025