Freelancer / 2023 ஏப்ரல் 23 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில், சம்மாந்துறை கோரக்கர் வித்தியாலய மைதானத்தில், கலை - கலாசார நிகழ்வுகளும், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவும் கோலாகலமாக நடைபெற்றன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன், முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்திட்டத்தின் கீழ், சம்மாந்துறையில் செயற்படுத்தப்படும் towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவின் ஏற்பாட்டில், இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இளங்கோவன், பள்ளிவாசல் நிர்வாக சபையினர், விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவினர் ஒழுங்கு செய்திருந்த காட்சிப் பலகையில் இந்நிகழ்வுக்கு வருகை தந்ந பிரதம விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர். (N)

5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago