Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில அமைச்சர்கள், நாட்டுக்கு அமைச்சர்கள் என்பதை மறந்து, சொந்த இனத்துக்காக மாத்திரம் சேவை செய்து வருகின்றனர் என, அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பனங்காட்டு கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு, பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நேற்று (15) நடைபெற்றது.
இதன்போது, 10 மில்லியன் ரூபாய் செலவில், காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சிவன் கோவில் வீதி, பனங்காடு பாசுபததேசுவரர் ஆலயத்தில் 5 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை, பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில், 20 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு ஆகியன மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதாகக் கூறிய அவர், இவ்வாறு தொடர்ந்து வாழ முடியாது என்றும் கூறினார்.
நாட்டுக்காக இருக்கும் அமைச்சர்கள், பக்கச்சார்பின்றி இருக்கவேண்டும் என்றும் ஆனால், பல அமைச்சர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago