2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘இனவாதக் கருத்தைப் பரப்புகின்றனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, பொத்துவில் - மதுரஞ்சேனை கிராமத்தில் அமைந்துள்ள மண்மேட்டு தொல்பொருள் புராதன சின்னங்களைப் பாதுகாத்து வழங்கியவர்கள் முஸ்லிம்களே எனவும் அதனை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்து, அங்குள்ள புராதன சின்னங்களை அழித்து வருகின்றார்கள் என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை எனவும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் தெரிவித்தார்.

பொத்துவில் மண்மேட்டு தொல்பொருள் பிரதேசம் தொடர்பில் அண்மைக்காலமாக கூறப்பட்டுவரும் இனவாதக் கருத்துகள்  குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு, பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (07)  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எமது நாட்டில் அமைந்துள்ள தொல்பொருள் புராதன அடையாளச் சின்னங்கள் இந்த நாட்டின் முக்கிய பொக்கிசங்களாகும். அதனைப் பாதுகாப்பது ஒரு சமூகத்தினரது கடமை மாத்திரமல்லாது அனைத்து இனத்தவகரினதும் கயுமைம், பொறுப்புமாகவுள்ளது என்றார்.

 “தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான மண்மேட்டுக் காணியில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறியே முகுது மஹாவிகாரை அமைக்கப்பட்டுள்ளது.

“அதுமாத்திரமல்லாது, அங்குள்ள விகாரதிபதி இன்று பொத்துவில் பிரதேச முஸ்லிம்கள் தொடர்பில் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பொய்யான இணவாதக் கருத்துகளைப் பரப்பி, இனநல்லுறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

“இவ்வாறான நிலையில் அப்பிரதேசத்திற்கு அப்பால் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அத்தனையையும் இனவாதமாகவும், பொய்யான தகவல்களையும் அங்குள்ள உடலமான ரத்னபிரிய கிமி தேரர் அங்கு வரும் பக்தர்களிடமும், ஏனைய இனவாத செயற்பாட்டாளர்களிடமும் பரப்பி வருகின்றனார்.

 “இப்புராதன பிரதேசத்தை அடையாளம் காட்யடிவர் முஸ்லிம் ஒருவரே. அதற்காக அவருக்குப் பரிசாக அங்கு காவலாளி வேலையும் வழங்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் கடந்த பயங்கரவாத யுத்தகாலங்களிலும் அங்குள்ள புராதன அடையளச் சின்னங்களையும், பிரதேசத்தையும் பாதுகாத்தவர்கள் முஸ்லிம் மக்களே ஆகும்.

“எனவே சம்மந்தப்பட்ட உரிய திணைக்களங்கள், அரச அதிகாரிகள் அங்கு வந்து தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை, முஸ்லிம்கள் சூறையாடி இருக்கிறார்களா? அல்லது தொல்பொருள் புராதன சின்னங்களை அழித்துள்ளார்களா என்ற உண்மையைக் கண்டறிந்து இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் உண்மையை எடுத்துக் கூற வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X