2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’இன்று சுற்றிவளைப்பு’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலங்களில் அமைக்கப்படும் பிரத்தியேகமான சந்தைகள், மொத்த விற்பனை நிலையங்களைக் கண்டறிவதற்காக, பாவனையாளர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள், நாளை (09) விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்டப் பொறுப்பதிகாரி என்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.

பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், இந்தச் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதுடன், பொதுமக்களுக்குக் கட்டுப்பாட்டு விலைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளிலும் மேற்படி அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சந்தைகள், மொத்த விற்பனை நிலையங்களில், கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோருக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையையும் மீறி பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, பொதுமக்களால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளையடுத்தே, இந்த விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்பவர்களும் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

விலைப்பட்டியலை நுகர்வோரின் பார்வைக்காக காட்சிப்படுத்தாத வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக, நீதிமன்றினூடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம்.சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X