2025 மே 05, திங்கட்கிழமை

இயந்திரத்துக்குள் அகப்பட்டு இளம் தொழிலாளி பலி

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, நிந்தவூர், அட்டப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அனல் மின்சார உற்பத்தித் தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த தொழிலாளி ஒருவர், நேற்று (09) இயத்திரத்துக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 அட்டாளைச்சேனை, தைக்காநகர் 15ஆம் கிராமத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த 40 நாட்களாகவே இத்தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்துள்ளாரெனவும் சம்பவ தினத்தன்று காலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, இயந்திரத்தினுள் அகப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாரென, தொழிற்சாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

சடலம், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையை, சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X