2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

“நாட்டுக்காக ஒன்றினைவோம்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலகமும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிக்கும் செய்லமர்வு, சேனைக்குடியிருப்பு கமநல சேவைகள்  நிலையத்தில் நேற்று (22) நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே இராஜதுறை தலைமையில், கல்முனை விவசாயத் திணைக்கள விவசாய போதனாசிரியர் ரி.செந்தூரன் நெறிப்படுத்தலில், இச்செய்லமர்வு நடைபெற்றது.

இதன்போது, இவர்களுக்கு இயற்கை சேதன பசளை செய்கை பற்றி வளவாளர்களால் தெளிவுட்டப்பட்டதுடன், செயன்முறை பயிற்சியுமளிக்கப்பட்டது.

வீட்டுத்தோட்டம், கூட்டேரு செய்கையாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X