Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை செவ்வாய்க்கிழமை (13) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள கோவிலொன்றில் கடந்த 4ஆம் திகதி இரவு திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது, அக்கோவிலுக்கு அருகில் நின்ற இரண்டு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் அது கைகலப்பாக மாறியது. இதில் காயமடைந்த 3 பேரில் 2 பேர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர்; அம்பாறை பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
கைகலப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் தம்மிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், 24 வயது முதல் 37 வயதுக்கிடைப்பட்ட மேற்படி சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் இவர்களில் காயமடைந்த 3 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
2 hours ago