Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்; அலுமாரியிலிருந்த 7 பவுண் நகை, பணம் உட்பட் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத வேளையிலேயே வீட்டின் ஓடுகளை பிரித்து கயிற்றின் உதவியுடன் உட்புகுந்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை,மட்டக்களப்பு காத்தான்குடி 2ஆம் குறிச்சி இப்றாலெவ்வை போடியார் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(20) இரவு வீடொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத வேளையிலேயே வீட்டின் கூரை ஓடுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அலுமாரியிலிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago