Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை வர்த்தகர் ஒருவர்; அச்சுறுத்தித் தாக்க முற்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் குறித்த வர்த்தகரை கைதுசெய்யுமாறு கோரியும் மாநகரசபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாநகரசபையின் அனைத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் சேவையும் நடைபெறவில்லை.
அத்துடன், கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பொதுநூலகங்கள், ஆயுர்வேத மருந்தகங்கள் ஆகியனவும் இயங்கவில்லை.
அதேவேளை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்று குறித்த வர்த்தகர் இன்று சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன்வந்துள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ அப்துல் கப்பார் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (03) மாலை சாய்ந்தமருது நகருக்குச் சென்ற ஆணையாளர், மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைக்கு முன்பான வீதியோர நடைபாதையில் மோட்டார் சைக்கிளொன்று விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை அவதானித்து, அம்மோட்டார் சைக்கிளை கடையினுள் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து, அக்கடை உரிமையாளர், ஆணையாளர் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், அவரை அச்சுறுத்தித் தாக்கவும் முற்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணையாளர் முறைப்பாடு செய்தார். இருப்பினும், குறித்த நபர் கைதுசெய்யப்படாமையைக் கண்டித்து பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்;ப்பாட்டப் பேரணியில் நேற்று திங்கட்கிழமை மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago