2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம், மருதமுனை மசூர் மௌலானா வீதியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளது.

ஐந்தாவது ஆண்டாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இரத்ததான முகாம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கிளைத் தலைவர் எம்.எச்.ஏ.அஜிமிர் தெரிவித்தார்.

இந்த இரத்த தான முகாமில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்துகொண்டு இரத்தம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 09 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரைக்கும் இந்த இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X