2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரவில் பீதியுடன் வாழும் மக்கள்

Freelancer   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் அஷ்ரப் நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் அதிகரித்து காணப்படும் காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு வரும் யானைக் கூட்டம இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்களையும், சேனைப் பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால்  பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டடுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிறுபோக வேளான்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நெற் பயிர்களை துவசம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் வாழும் மக்கள் பீதியின் காரணமாக மாலை நேரங்களில் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி பாதுகாப்பை தேடி தங்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கும் சென்று காலையில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், நோயாளர்கள் போன்றோர் வெகுவாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

அத்துடன் எல்லை கிராமங்களான  சம்புநகர், ஹிறாநகர், ஆலிம்நகர் ஆகிய பிந்தங்கிய பிரதேசங்களிலும் யானைத் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,   அதிகரித்துக் காணப்படும் காட்டு யானைத் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு எல்லைக் கிராமங்களில் மின்சார வேலிகளை அமைத்துத் தருமாறு பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .