Freelancer / 2023 மார்ச் 30 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் நிந்தவூர் பிரதேச சபை முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான பழைய கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் பன்னை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான வர்த்தக கட்டிட தொகுதியினை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டிடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கான முன்னெடுப்புக்களின் ஓர் அங்கமாக நேற்று அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் வந்து பார்வையிட்டிருந்தனர்.
இதன் போது இராணுவ உயர் அதிகாரி , அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர். R
7 hours ago
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
25 Oct 2025