Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசத்தில், இராணுவம் குடிகொண்ட ஒரு பாடசாலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இதேபோன்று, ஏனைய பாடசாலைகளும் விரைவில் விடுவிக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவற்காடு பிரிவில் உள்ள வீதி ஒன்றின் செப்பனிடும் பணியை, நேற்று முன்தினம் (31) மாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலத்தில் பாடசாலை கட்டடங்களில் குடிகொண்ட இராணுவத்தை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் தம்மால் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் இராணுவ வசம் உள்ள மூன்று பாடசாலை கட்டடங்களையும் கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆயினும் இராணுவம் குடிகொண்டுள்ள திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலய கட்டடம் மட்டுமே தற்போது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில் ஏனைய இரு பாடசாலைகளான கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம் ,அக்கரைப்பற்று சென்ஜோன் வித்தியாலய கட்டடங்களையும் விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், நல்லாட்சி என சொல்லப்படும் இவ்வாட்சியில், இராணுவ பிரசன்னங்கள் தவிர்க்கப்பட்டு, சகல பாடசாலை கட்டடங்களும் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்படவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago