Freelancer / 2025 ஜனவரி 11 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை - மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் அடை மழை ஆரம்பித்துள்ள நிலையில் இப்பகுதியி இருளில் முழ்குவதால் வீதியில் செல்லும் வாகனங்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் அம்பாறை - காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதனால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி சியாரம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒளிந்த பின் மீண்டும் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒளிராமல் பல சிரமங்களை ஏற்படுகிறது.
மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் பாம்பு முதலை ஆமை போன்றவைகளின் அச்சுறுத்தலும் இங்கு ஏற்படுகின்றது.
எனவே இவ்வீதியின் மின்விளக்குகள் தொடர்ந்தும் ஒளிர்வதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். R
23 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago