2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இறக்காமம் கோட்டத்துக்கு 15 ஆசிரியர்கள்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறைக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட இறக்காமம் கோட்டத்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற 6 பாடசாலைகளுக்கு 15 ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எஸ்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

இந்த ஆசிரியர் நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தொலைபேசி மூலம் தன்னிடம் தொடர்புகொண்டு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி கோட்டத்திலுள்ள இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி, மதீனா வித்தியாலயம், மாணிக்கமடு தமிழ்க் கலவன் பாடசாலை, வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலயம், றோயல் கனிஷ்ட கல்லூரி, அமீர் அலிபுர வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் பகிஷ்கரிப்பில் திங்கட்கிழமை (03) ஈடுபட்டதுடன், ஐந்தம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.  

மேற்படி பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்கங்கள், அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனம், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான கூட்டம், இறக்காமம் ஜும்மா  பள்ளிவாசலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆகவே, பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய, மேற்படி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை வழமைக்குத் திரும்பியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X