2025 மே 03, சனிக்கிழமை

இலங்கை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா பிக்குகள்?

Editorial   / 2022 மார்ச் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பிக்குகள் ​முன்னெடுக்கும் திட்டங்களைத் தெரிந்து கொண்டும், நாட்டில் அநாவசியமான முரண்பாடுகளை உருவாக்கக் கூடாதென முஸ்லிங்கள் அமைதியாக உள்ளனர் என சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில், சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யூசூப் அன்வர் ஸியாத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இனவாதத்தால் இலங்கை இன்று சுக்குநூறாக உடைந்து, சர்வதேசமளவில் விலாசமிழந்துள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கை முஸ்லிங்களை மீண்டும் மீண்டும் சீண்டும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

“பலாங்கொட, கூரக்கல ஜெய்லானி எனும் இடத்தில் முஸ்லிங்களின் 800 வருடங்களுக்கு மேற்பட்ட அடையாள சின்னங்கள், பிக்குகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. அங்கு பாரிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதை முஸ்லிங்கள் அறியாமலில்லை.

“பிக்குகளை தொடர்ந்தும் தூண்டிவிட்டு, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் இரவோடிரவாக வயல், காடு, மேடு மற்றும் மலைகளில் பௌத்த சிலைகளை வைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

“பொலிஸாரால் அல்லது அரசால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு பிக்குகள் சட்ட வரையறைகளுக்கு அப்பால்பட்டவர்களா? இலங்கை சட்டம் இவர்களுக்கு உரித்ததாகவில்லையா என கேள்வியெழுப்புகிறோம். இது இலங்கையர்கள் எல்லோருக்கும் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது.

“இவ்வாறான அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக அமையாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X