2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கைப் பிரதிநிதியாக கல்முனை முதல்வர் டேர்பன் பயணம்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

உலகளாவிய நகர முதல்வர்களின் பாராளுமன்றம் (Global Mayors Parliament) எனும் சர்வதேச அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்கள் டேர்பன் நகரில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் வருடாந்த சர்வதேசப் பேரவை மாநாட்டில் கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப், இலங்கை சார்பில் பங்குபற்றவிருக்கிறார். '2020ஆம் ஆண்டுக்கான நகர சுற்றுச்சூழல் வலுவூட்டல், உலக தரத்தில் பன்முக ஆளுகைக்கான ஒழுங்குபடுத்தல்- ஒரு தசாப்த மாற்றம்' எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான பிரகடனமும் இந்த சர்வதேச பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்படவிருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .