2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலஞ்சம், ஊழல்கள் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

சுதந்திரமானதும்  நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமும் (கபே) இலஞ்சம், ஊழல்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இலஞ்சம், ஊழல்கள் தொடர்பாக மக்களை அறிவூட்டும் விசேட செயலமர்வு, அட்டாளைச்சேனையில் நேற்று (19) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெறுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைகின்றது என்பது பற்றியும், இலஞ்சம் ஊழல்களை சமூக மட்டத்திலிருந்து எவ்வாறு ஒழித்தல் என்பது பற்றியதுமான தெளிவுரைகள், துறைசார் வளவாளர்களால் இதன்போது வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X