2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

’இலவச உரம் கிடைக்கவில்லை’

Editorial   / 2020 மே 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற இலவச உரம், அம்பாறை  மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லையென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2020 சிறுபோக வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தத்தமது கமக்காரர் அமைப்புகளினூடாக ஏக்கர் வரி செலுத்தி, விண்ணப்பித்து பல மாதங்கள் கடந்த போதிலும் இதுவரை உரம் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கின்றனர்.

விதைத்து ஒரு மாதம் கடந்த போதிலும் உரம் கிடைக்காததால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு வேளாண்மைக்கு உரிய காலத்தில் உரம் விசிற முடியாமல் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்தில் உரம் கிடைக்காததால், தனியார் வியாபாரிகளிடமிருந்து கூடுதலான விலைக்கு உரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உரத்தை விரைவாக வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .