2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலவச செயலமர்வு

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை BCAS (பீகாஸ்) உயர்கல்வி வளாகத்தால், "உலகைக் கையாளுதல்" எனும் தொனிப்பொருளில், சுமார் 100 மாணவர்களுக்கான இலவச செயலமர்வொன்று, அண்மையில் நடைபெற்றது.

BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் பொறியியலாளர் என்.டி ஹமீட் அலியின் தலைமையில் சம்மாந்துறை பிரதேசபையின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை மஜீட்மண்டபத்தில் இச்செயலமர்வு  நடைபெற்றது.

இதன்போது, நேர்முகப் பரீட்சையொன்றுக்கு எவ்வாறு வெற்றிகரமாக முகங்கொடுப்பது, இணையத்தின்  மூலம் பணம் சம்பாதிப்பது, சுயதொழிலை எவ்வாறு மேற்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், துறைசார்ந்த விரிவுரையாளர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X