Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்களின் முதலாம் நாளான இன்று திங்கட்கிழமை உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்தவ முகாம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 50ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்..
இதன்போது,தொற்றா நோய் தொடர்பான வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்றது.
இரண்டாம் நாளான 08ஆம் திகதி நடமாடும் சேவையாகவும் முன்றாம் நாளான 09ஆம் திகதி வருமான அபிவிருத்தி தினமாகவும் 10ஆம் திகதி கல்வி மற்றும் நூலக தினமவும் 11ஆம் திகதி சுற்றாடல் தினமாகவும் 12ஆம் திகதி மக்கள் தினமாகவும் இறுதி நாளான 13ஆம் திகதி விளையாட்டு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீலுர் ரகுமான் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago