2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலவசமாக 1,000 முகக் கவசங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு, கொரோனா வைரஸ் பாதுகாப்புக்காக இலவசமாக 1,000 முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே அதிசயராஜ்  வழிகாட்டலின் கல்முனை 2  சமுதாய அடிப்படை சங்கங்களின்  பிரிவுக்குட்பட்ட வாழ்வாதாரங்களை இழந்து  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் சமூர்த்தி  தலைமைத்துவ  முகாமையாளர் கே.இதயராஜ், திட்ட முகாமையாளர் என்.நஜீம், சமுர்த்தி உத்தியோகத்தர்களான எம்.தயாழினி, வ.விமலராஜ், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ.ஞானபிரகாசம், கல்முனை 2 பிரிவுக்கான கிராம சேவகர் எஸ்.அருள்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு, முகக்கவசங்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .