2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் முகாம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச இளைஞர் முகாம் நாளை வெள்ளிக்கிழமை 03 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமைவரை ஒலுவில் அல் -ஜாயிஸா மகளிர் வித்தியாலயத்தில ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 'ஹோப்' வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த இளைஞர் முகாம் நடத்தப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல்.ஏ.மஜீட் தெரிவித்தார்.

இந்த இளைஞர் முகாமில் 100 இளைஞர், யுவதிகள் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இளைஞர் கழகங்களின் தலைவர்கள் மற்றும்  அங்கத்தவர்களுக்கு இடையிலான நட்பை  மேம்படுத்துதல், கழங்களினுடைய தலைவர்களின் அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல், தொடர்பாடல் திறமை,  ஆளுமை, அபிவிருத்தி ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இளைஞர் முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச இளைஞர் சம்மேளனம் ஊடாக பிரதேச இளைஞர் முகாம்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X