Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கே.ஆர்.றிஸ்கான் முஹம்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, கட்சித் தலைமையகத்தில் வைத்து நேற்று (08) நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் றிஸ்கான் முஹம்மட் கலந்துரையாடினார்.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago