2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இழந்த உயிர்களை மீட்கமுடியாது, எங்களை மீளக்குடியேற்றலாம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எம்.எஸ்.எம். ஹனீபா

இழந்த உயிர்களை மீட்கமுடியாது ஆனால், எம்மை எமது சொந்த இடங்களிலேயே குடியமர்த்தி  எமது ஜீவனோயபாய தொழில்களை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். என்பதோடு, யுத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அதற்கான நஷ்ட ஈட்டினையும் பெற்றுத்தர வேண்டும் என பொத்துவில் வட்டிவெளி 60 ஆம் கட்டையில் வசிக்கும் இளையதம்பி சுதாகர்(41) தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (27), பொத்துவில் பிரதேச செயலகத்தில், நல்லிணக்கப் பொறிமுறை கருத்தறியும் அமிர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்கொண்டு அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

1990 ஆம் ஆண்டு நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அகதிகளாகக்கப்பட்டு வெளியேற்றப்பட்டோம். யுத்த நிறைவடைந்துள்ள நிலையில் எங்களது சொந்த ஊரான 60 ஆம் கட்டைக்குச் செல்வதற்கு பொத்துவில் பிரதேச செயலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் கொடுத்தும் இதுவரை பலன்கிடைக்கவில்லை.

அப்பகுதியில் இராணுவமுகாங்கள் உள்ளதால் நாங்கள் மீளக்குடியேற்றப்படுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வருகின்றனர். வாக்காளர் இடாப்பு, பாதிக்கப்பட்ட வீடுகள், கிணறுகள் என்பன நாங்கள் அங்கிருந்தோம் என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

எமது குடும்பத்தில் இரண்டு உறவுகளையிழந்துள்ளதுடன் எமது வாழ்வாதாரங்கள் சொத்துக்கள், கால்நடைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியான நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இச்செயலணியின் மூலமாக நல்லாட்சி அரசாங்கம் எங்களது கோரிக்கைகளை செவிமடுத்து எங்கள் சொந்த நிலங்களை எமக்கே மீண்டும் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X