எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 05 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனையிலிருந்து உகந்தைக்கான இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் கிரமமாக தினமும் காலை 06.30 மணியிலிருந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கல்முனைச் சாலை உதவிச் செயலாற்று முகாமையாளர் யூ. கே. சலீம், இன்று (05) தெரிவித்தார்.
பிரயாணிகள் முன்கூட்டியே ஆசனப் பதிவை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், கல்முனையிலிருந்து ஒரு வழிப்பயணக் கட்டணமாக 315 ரூபாயுடன், ஆசனப் பதிவுக்கட்டணமாக 30 ரூபாயுடன் சேர்த்து 345 ரூபாய் அறவிடப்படுவதாகவும், அவர் கூறினார்.
இந்தபஸ் சேவை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய இடங்களில் தரித்துச் செல்வதுடன், பஸ்ஸை முன் கூட்டியே குழுவாகப் பதிவு செய்தால் தனி பஸ்ஸை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதுடன், நாளுக்கு நாள் பிரயாணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
கதிர்காமத்துக்கான பஸ் சேவையும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026