Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள உணவகங்களை தரப்படுத்தி சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ், சுகாதார பரிசோதகர்களால் இன்று சனிக்கிழமை(05) உணவகங்களில்; பரிசோதனை இடம்பெற்றதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். கலீலுர் றகுமான் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சுகாதார திணைக்களமும் இணைந்து முன்னெடுத்துள்ள இரண்டாம் நிலை சுகாதாரத் துறை அபிவிருத்து திட்டத்தின் கீழ் உணவு கையாழுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் தரச்சான்றிதழ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். கலீலுர் றகுமான் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபை, அட்டாளைச்சேனை வைத்தியதிகாரி அலுவலகம் என்பன இணைந்து மேற்கொண்ட பரிசோதணை கல்முனைப் பிராந்திய மாவட்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் பீ. பேரின்பலம் தலைமையில் ஒலுவில், அட்டாளைச்சேனை, பாலமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் பரிசோதனை இடம்பெற்றது.
பரிசோதனையின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வைத்திருந்த சில உணவகங்கள் ஒரு வார காலத்துக்குள் துப்பரவு செய்யப்பட வேண்டுமெனவும், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் துப்பரவு செய்யப்படவுள்ள உணவகங்களின் உரிமையாளர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் பீ. பேரின்பலம் தெரிவித்தார்.
பிராந்திய மருந்து மற்றும் உணவு பரிசோதகர் எஸ். தஸ்தகீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். கலீலுர் றகுமான் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எம். ஜெசீல், எம்.எம். ஜெஸீர் ஆகியோர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் 05 உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பரிசோதனை இடம்பெற்றது.
9 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago