எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள உணவகங்களில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
சில உணவகங்கள் சுத்தமாக இல்லாமல் இருப்பதோடு, காலவதியான, பழுதடைந்த உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பல நோய்களுக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உணவு விற்பனை நிலையங்கள், உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உணவு கையாளுவது தொடர்பாக எவ்வித அறிவுமில்லாத நிலையில் பணிபுரிவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே, அந்தந்த பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்கள் இது தொடர்பாக கவனமெடுத்து உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் ஆகியவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், ஊழியர்களுக்கு உணவு கையாளுவது தொடர்பான செயலமர்வுகளை நடத்த வேண்டுமெனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago