2025 மே 14, புதன்கிழமை

‘உணவுப் பற்றாக்குறையை வெற்றி கொள்வோம்’

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்துக்கமைய, அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தால், மிளகாய், கௌப்பி, பாசிப்பயறு, நிலக்கடலை ஆகிய விதைகள், மானிய அடிப்படையில் இன்று (06) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

“கொரோனாவை தோற்கடிப்போம் - உணவுப்பற்றாக் குறையை வெற்றி கொள்வோம்” எனும் தொனிப்பொருளில், தேசிய உணவுச் சேவையை பூர்த்தி செய்வதற்காக 2020 சிறுபோகத்தில் விரைவாக பயன்தரக் கூடிய பயிர் நடுகைத் திட்டம், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்கத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீரின் ஆலோசனைக்கமைய, நிலையப் பொறுப்பு விவசாய போதானாசிரியர் ஏ.எச்.ஏ. முபாறக் தலைமையில், மேற்படி விதைகள்  வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 02 ஆயிரம் ஏக்கரில், இப் பயிர்ச்செய்கைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இந்த மானியத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X