2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய் பரிசோதனை

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றிவரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான தொற்றா நோய் பரிசோதனை, பிரதேச செயலகத்தில், இன்று (27) நடைபெற்றது.

மக்களுக்கான சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில், உடல், உள ஆரோக்கியத்துடனான அரச பணியாளர்களைத் தயார்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கயைம அரச நிறுவனங்களில் தொற்றா நோய் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் இத்தொற்றா நோய் பரிசோதனைகள் நடைபெற்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தொற்றா நோய்ப் பிரிவின் வைத்தியர்களான சியாத் இஸ்மாயில், எஸ்.எப்.மப்றூகா, தாதி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தொற்றா நோய்களான நீரிழிவு, கொலஸ்ரோல், இரத்த அழுத்தம், சிறுநீரக பரிசோதனையின் பொருட்டு, இரத்த மாதரிகள் பெறப்பட்டதுடன், உடற் திணிவு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

உடல், உள சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணும் வகையில், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட சுகாதாரப் பதிவுக் கையேடுகளும் இதன்போது வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X