2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உயிரின் மதிப்பு ஒரு இலட்சமா?

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலச்சம் ரூபாய் கொடுப்பனவு எனத் தெரிவித்த நீதி அமைச்சர், ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

தமிழ்களுடைய உயிரின் மதிப்பு ஒரு இலச்சம் ரூபாயா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக  ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நீதி அமைச்சர் வெளியிட்டிருப்பது ஒரு வேதனையான விடயம். தமிழர்களை இவர்கள் எவ்வாறு, எந்தளவுக்கு வைத்திருக்கின்றார்கள் என்பது இதில் புலனாகிறது.

“தமிழ்களுடைய உயிர் ஒரு இலச்சம் ரூபாய் பெறுமதி என்ற அடிப்படையில் இவர்கள் கையாளுகின்ற விடயத்தை நாங்கள் மன வேதனையுடனான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன்.

“இந்த நாட்டில் தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசாங்கம் அது சம்மந்தமாக எந்தவிதமான நியாயமான ஒரு விடயங்களையும் கையாள்வதற்கு தயாரில்லை என்ற அடிப்படையில் உள்ளது.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் நீண்டகாலமாக அவர்களுக்கு நியாயங்களை பெற்றுத்தரவேண்டுமென சர்வதேசத்தை கோரி வருகின்றனர். இவ்வாறு சர்வதேசத்தை கோரிவரும் இந்தக் கால கட்டத்தில் நீதி அமைச்சர் முன்வைத்திருக்கின்ற விடயம், இந்த அரசாங்கம், தமிழர்களை மிக மோசமாக கையாளுகின்ற விடயத்தை  எடுத்துரைத்துள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .