2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உயிர் பலியைத் தடுக்க புதிய தலைக்கவசம் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அதிகரித்து வரும் வீதி   விபத்துகளால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கும் முகமாக  கல்முனை பற்றிமா கல்லூரியின் கணிதப் பிரிவு மாணவன் கி.முகேஷ் ராம் (வயது 17), புதிய தலைக்கவசம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

இம்மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவுக்குச் செல்வதற்கு கிழக்கு மாகணத்திலிருந்து இந்த வருடம் இம்மாணவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 தனது கண்டுபிடிப்புத் தொடர்பில் மாணவன் கருத்துக் கூறுகையில், இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில்  மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றால்  இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு உடனடியாகத் தகவல் வழங்கி, மரணத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கான தலைக்கவசமாகத் தனது கண்டுபிடிப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த தலைக்கவசம், விபத்து இடபெற்ற இடத்தைத் தெரியப்படுத்தும் விதத்திலும் குறிப்பாகத் தொடுகை மென்பொருளைப் பயன்படுத்தி பாதிப்புகள் சம்பந்தமான குறுஞ்செய்தி மூலம் அலைபேசிக்குத் தகவல்கள் வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாவும் மாணவன் தெரிவித்தார்.

பெளதீக வளங்கள் இல்லாத நிலையிலும் மாணவர்களது கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்க விடயமெனவும் பாடசாலைகளுக்கு பெளதீக வளங்கள், தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படுமானால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிள் நம் நாடு மேலும் வளர்ச்சியடையுமெனவும், கல்லூரியின் அதிபர் அருட்தந்தை எஸ். சந்த்தியாகு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X