Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு, மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு, கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், இருவேறு சந்தர்ப்பங்களில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் நேற்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு, பாதுகாப்புத் தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி, பல மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை, பெப்ரவரி 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை, சாய்ந்தமருது ,சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இதில் கல்முனை ,சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிற்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகநபர்களும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
21 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
46 minute ago