Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களிலும் கடந்த 10 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், உயிர்நீத்த தாய்மார்கள், உறவினர்கள் 58 பேருக்கான ஆத்த சாந்தி வேண்டி அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
இந்த அஞ்சலி நிகழ்வு, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், திருக்கோவில், தம்பிலுவில் பொதுச் சந்தைக் கட்டத்துக்கு முன்பாக நேற்று (17) நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, தம்பிலுவில் சந்தைக் கட்டடத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி பேரணியாக திருக்கோவில் தபால் நிலையம் வரைச் சென்று மீண்டும் தமது அலுவலத்தினை பேரணி வந்தடைந்ததுடன் அங்கு 58 மெழுகுவர்த்திகள் ஏற்ற உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டு இருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
4 hours ago