2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உலக இதயநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

உலக இதயநோய் தினத்தையொட்டி, கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை, தொற்றா நோய்ப்பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம், கல்முனையில் இன்று (30)  நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலம், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை முனன்றில் ஆரம்பித்து, பொலிஸ் வீதியினுடாகச் சென்று, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை,  பிரதான வீதி வழியாக கல்முனை பொது சந்தை வரை   சென்று,  மீண்டும் ஆரம்ப இடத்தை வந்தடைந்தது.

இதன்போது, பொதுமக்களுக்கு  நோய் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X